ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kuthiraivalli-Coconut-Milk-Pulao-2
kuthiraivalli-Coconut-Milk-Pulao-2

குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ்
தேவையான பொருட்கள்
குதிரைவாலி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2 (சிறியது)
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது – 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பால் – ஒரு கப்
கிராம்பு, ஏலக்காய், பட்டை – தலா 2

செய்முறை
குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கி விடவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.

குக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும்.

வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும். தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

சுவையான குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.