–ஜெயஸ்ரீ எம்.சாரி-
தமிழகத்தை தாண்டி தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் இயங்கும் இலக்கிய வட்டங்களில் மகாகவி பாரதியும், தெய்வப்புலவர் திருவள்ளுவரும், ஆன்மீக இலக்கியத்தில் ஸ்ரீ ஆண்டாளும், அருணகிரிநாதரும் தற்போதும் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.
இதனை உணர்த்தும் விதமாக நாக்பூரில் செயல்படும் சௌத் இண்டியன் எஜூகேஷன் சொசைட்டியும் தங்கள் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்திலிருந்து பாடல்களை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் திறமைகளை நாக்பூரில் நடக்கும் தமிழி நிகழ்ச்சிகளின் மூலமாக வெளிப்படுத்தவும் முயற்சிகள் எடுத்து வருகின்றது.
சௌத் இண்டியன் சொசைட்டியினால் நடத்தப்படும் சரஸ்வதி வித்யாலயாவில் படிக்கும் தமிழ் தாய்மொழி இல்லாத குழந்தைகளுக்கும் பாரதியின் பாடல்களையும், ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் நாக்பூரில் இயங்கி வரும் ராமானுஜ பாத சபாவில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நாக்பூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவின் சங்கர் நகர் மற்றும் பர்டி கிளைகளில் பாலர் வகுப்புகளில் படிக்கும் 24 குழந்தைகளான கரீமா பிள்ளை, லாவண்யா மடாவி, அனுபா வாக், க்ருஷ்ணாலி மர்வாடே, க்ருத்திகா ஷேண்டே, ப்ரியல் சஹாந்தே, ஷண்முகா கணேஷ், விவிதா சௌஹான், ஸ்வரா பதாடே, அன்ஷூல் ஷர்மா, ஜனிஷ்கா சிடாம், அத்விகா டவரே, காவ்யானி மூன், திவ்யா மானே, வாணி டோயே, ஷௌரியா பௌல்யாகடே, ஜியா ஃபடே, நிகுன்ஜ் கனோஜா, சன்வி அதில், அனகா காளே, ஹிமாங்கி இங்கலே, நியேஷா கட்கி மற்றும் ஸ்ரீ போர்கர் ( அவர்களின் தாய்மொழி தமிழ் அல்ல) தங்கள் மழலை குரலில் ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையில் இருந்து ‘மார்கழித் திங்கள்’, ‘ ஒருத்தி மகனாய் பிறந்து’ மற்றும் ‘புள்ளின் வாய் கீண்டானை’ – ஆகிய பாசுரங்களை பாடினர்.
சரஸ்வதி வித்யாலயாவில் பணிபுரியும் ஆசிரியைகளான V. துர்காலெக்ஷ்மி, M. வித்யா, மீனாக்ஷி விஜயகுமர் மற்றும் S. காயத்ரி ஆகியோர் குழந்தைகளுக்கு அழகாகவும், பொறுமையாகவும் திருப்பாவை பாசுரங்களை கற்றுக் கொடுத்துள்ளனர்.
திருப்பாவை பாடிய குழந்தைகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைமை அதிகாரி T K வெங்கடேஷ், துணை தலைமை அதிகாரி V. சங்கரன், செயலாளர் மீனாக்ஷி விஜயகுமார், துணை செயலாளர் Dr R. S. சுந்தரம், பொருளாளர் R. கணேஷ், பாலர் பள்ளியின் மேற்பார்வையாளர் லதா ரகுநாதன் மற்றும் உறுப்பினர் துரைராஜன் ஆகியோர் ஊக்குவித்து பாராட்டினர்.
நாக்பூரில் இருக்கும் பிரபல கர்நாடக இசை கற்பிக்கும் ஆசிரியை ரஞ்சனி கிருஷ்ணகுமார், ஷங்கர் ராமன் தம்பதியர் மற்றும் ராமானுஜ சபா உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகளையும் வழங்கி நிகழ்ச்சிக்காக தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர். மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தனர்.