
கருணாநிதி சிலைத் திறப்பு விழாவிற்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு வந்த பெண் காங்கிரஸ் துணை அமைப்பாளர், பெண் காவல் உதவி ஆய்வாளரை கீழ்த்தரமாகப் பேசிய வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு வந்துள்ளார் காங்கிரஸ் துணை அமைப்பாளரான பெண் ஒருவர். அவர் வந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் காங்கிரஸ் துணை அமைப்பாளர் பெண்ணிடம் மேடம் கூட்டம் அதிகமாக உள்ளதால் யாரையும் உள்ளே விட கூடாது என்று உந்தரவு போடப்பட்டுள்ளது. நீங்க வெய்ட் பண்ணுங்க. கொஞ்ச நேரம் கழித்து உள்ளே விடுகிறேன் என்று கூறி உள்ளார்.
இதைக் கேட்டு கோபம் அடைந்த காங்கிரஸ் துணை அமைப்பாளர் பெண், அந்த உதவி ஆய்வாளரை கீழ்த்தரமாகப் பேசியதுடன், வாடி போடி என்று ஒருமையிலும் திட்டியுள்ளார்.
மேலும், காவல்துறை அராஜகம் என்னிடம் வேண்டாம்! இது எல்லாம் முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுடன் போய் விட்டது. அதெல்லாங்கம் பாத்துட்டோம் என்று திட்டித் தீர்க்கிறார். இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பதிவு…