நாளை முதல் ஆன்லைனில் மார்ச் மாத தரிசன டிக்கெட்! திருப்பதி தேவஸ்தானம்!

ஆலயங்கள் இந்தியா சற்றுமுன்
21 July09  Thirupathi
21 July09 Thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (நாளை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க, 20-ந்தேதி மாலை 3 மணியளவில் காலியாக உள்ள அறைகளின் விவரம் ஆன்லைன் மூலமாக வெளியிடப்படுகின்றன.

எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.