பிப்ரவரி 25, 2021, 12:33 காலை வியாழக்கிழமை
More

  42 பேருக்கு கலைமாமணி விருது!

  Home சற்றுமுன் 42 பேருக்கு கலைமாமணி விருது!

  42 பேருக்கு கலைமாமணி விருது!

  Saroja-devi
  Saroja-devi

  தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வருடந்தோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திரைத்துறையில், சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, செளகார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  sowkar-janaki
  sowkar-janaki

  நடிகைகள் சரோஜாதேவி, செளகார் ஜானகி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  sujadha
  sujadha

  இவர்களுடன் இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  dheena-1
  dheena-1

  மேலும் தயாரிப்பாளர்களில் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  devadharshni
  devadharshni

  கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா, ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ்,

  shanthi
  shanthi

  நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.