தூய்மைப் பணியாளர் நல வாரியம் குறித்து முதல்வரிடம் கோரிக்கை: ஆணைய தலைவர் ம.வெங்கடேசன்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
venkatesan-ma
venkatesan-ma

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான
நல வாரியம் அமைப்பது குறித்து, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்; செப்டிக் டேங்க் கழுவுவதற்கு 50% மானிய விலையில் இயந்திர வசதி செய்து தரப்படும் என்று, தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது…

1993ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையாளராக ஒரு தமிழரை மத்திய அரசாங்கம் நியமித்திருப்பது பெருமை அளிப்பதாகக் கூறினார்.

மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்த மனிதர்களே செப்டி டேங்க்-ல் இறங்கும் அவல நிலை மாற்றம் செய்யப்பட்டு செப்டி டேங்க் கழுவுவதற்காக இயந்திரம் 50% மானியத் தொகையாக வழங்கபடும் என தெரிவித்தார்..!!

தொடர்ந்து, செப்டி டேங்கில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்வது சட்டப்படியான குற்றம் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்..! மேலும், மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போல் தமிழகத்திலும், தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைப்பது குறித்து முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும் என்றார்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர் இறப்பு குறித்தான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்..!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.