
திமுக தலைவர் சொல்வது முற்றிலும் பொய். முதலில் அவர் முதல்வர் ஆன பிறகு முதல் கையெழுத்துப் போடுவாராம்… தற்போது வரை வாங்கிய மனுக்களை என்னிடமாவது கொண்டு வந்து கொடுத்தால் தானே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இது கூட தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாரே.., என்று ஸ்டாலினுக்கு பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணாதுரை ஆகியோர் சிலைகளை திறந்து வைத்ததுடன், அதே பகுதியில் மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக 100 அடி கம்பத்தில் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி.

அப்போது பொதுமக்களிடையே பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் சொல்வது முற்றிலும் பொய். முதலில் அவர் முதல்வர் ஆன பிறகு முதல் கையெழுத்துப் போடுவாராம்… தற்போது வரை வாங்கிய மனுக்களை என்னிடமாவது கொண்டு வந்து கொடுத்தால் தானே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இது கூட தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாரே… என்றார்.
இந்த பயணத்தில் ஒரு பகுதியாக, குளித்தலை நகருக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் பேசியதாவது…

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்
ஸ்டாலின் பொய்யாகவே பேசி வருகிறார் அவருக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்… திமுக குடும்ப கட்சி கார்ப்ரேட் கம்பெனி அதன் சேர்மன் ஸ்டாலின்! திமுக விற்காக பாடுபட்டவர்கள் பலர் இருந்தும் அவர்களை பிரச்சாரத்திற்கு அனுப்புவதில்லை! உதயநிதிக்கும் திமுக விற்கும் என்ன சம்பந்தம்? அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதலமைச்சரே ஆகலாம் ஆனால் திமுக வில் வர முடியாது !

குளித்தலை சட்டமன்றத் தொகுதி வேளாண் பெருமக்கள் தொழிலாளிகள் நிறைந்த பகுதி! விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் நன்றாக தெரியும், திமுக தலைவர் தற்போது பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டி வீட்டில் வைத்துவிட்டு 3 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராகி திறப்பேன் என்று கூறுகிறார்! இப்படி பட்ட தலைவரை எங்கேயாவது பார்த்துண்டா?
2019 ல் ஊர் ஊராக சுற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது! அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டதா? அந்த மனுக்கள் என்ன ஆயிற்று? அப்போது வாங்கிய மனுக்கள் போலவே இப்போது வாங்கி வரும் மனுக்களும் இருக்கும்!
அதிமுக அப்படி அல்ல! எதைச் சொல்கிறோமோ அதைச் செய்கின்ற கட்சி! 2006 ல் திமுக தேர்தல் அறிக்கையில் நிலம் அற்ற விவசாயிகளுக்கு நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை! நிலத்தை கொடுக்காவிட்டால் பராவில்லை பிடுங்காமல் இருந்தாலே போதும்!

நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம் அதிமுக! அதிமுக ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பம்பு செட்டிற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நிலமில்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசே வீடு கட்டித் தரும்! காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும்!
பொங்கலுக்கு அதிமுக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டது. திமுக வில் 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை! அப்படிபட்டவர் எப்படி ஏழை மக்களைக் காப்பாற்றுவார் !
ஒட்டு மொத்த உழைக்கும் மக்களைக் காக்கும் கட்சி அதிமுக! நீர் மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகின்றது. தண்ணீரை முறையாக சேமித்து விவசாயிகளுக்கு வழங்க குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு அதை செயல்படுத்தியது அதிமுக அரசு தான்… என்று குளித்தலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கரூர் வந்தார். திருச்சியில் இருந்து இன்று மதியம், கரூர் வந்த முதல்வர் பழனிசாமிக்கு, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, தேசத்தந்தை காந்தி சிலை, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கரூர் பஸ் ஸ்டாண்ட், வெங்கமேடு பகுதியில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து, வாங்கல் சாலை தண்ணீர்பந்தல் பாளையத்தில் மாலை 6.மணிக்கு, அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் உழவன் திருவிழா மற்றும் விவசாயிகள் மாநாட்டில் பேசினார்.
விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ., கீதா, அ.தி.மு.க., நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
à®…à®°à¯à®®à¯ˆ