15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி பாலியல் உறவு! இளைஞன் போக்சோவில் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன் தமிழகம்
kumar-1
kumar-1

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர்.

கேரள மாநிலத்திலுள்ள சோலையூர் கிராமத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற கூலி வேலை பார்க்கும் மகன் உள்ளார்.

இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும் போது, அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது.

இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த 7ஆம் தேதி குமார் திருமண ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அட்டுக்கள் என்ற கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையில் கோத்தகிரி காவல்நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் தனது மகள் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது செல்போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டனர். இதனை தொடர்ந்து அந்த இருவரையும் கோவைக்கு சென்று போலீசார் மடக்கி பிடித்து விட்டனர்.

இந்த வழக்கானது அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீட்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, சிறுமியைப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குமாரின் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.