பந்தயத்துக்காக கோழியின் காலில் கட்டிய கத்தி… ‘அதை’ நறுக்கியதால் துடிதுடித்து இறந்த இளைஞர்!

Published:

telangana-cock-fight-1
telangana-cock-fight-1
  • தெலங்காணாவில் நடந்த சோகம்.
  • கோழியின் காலில் கட்டிய கத்தியினால் வந்த ஆபத்து.
  • ஆணின் மர்ம உறுப்பை வெட்டியதால் உடனே மரணம்.

கோழி பந்தயங்களின் வினோதம் ஒருவரின் உயிரை எடுத்தது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் அவர் உயிரிழந்தார்.

தெலங்காணா ஜகித்யால மாவட்டம் கொல்லப்பல்லி எல்லையில் லோத்துனூர் கிராமத்தில் கோழி பந்தயம் நடத்துவதற்கு உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டார்கள். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலர் கோழிகளை எடுத்துக்கொண்டு பந்தயத்தில் பங்கு பெறுவதற்காக வந்தார்கள்.

வெல்குடூரு மண்டலம் கொண்டாபூரைச் சேர்ந்த தனுகுல சதீஷ் கூட தன் கோழியோடு அங்கு வந்து சேர்ந்தார். பந்தயத்தை பார்ப்பதற்காக மக்கள் பெருமளவில் அங்கு குவிந்தார்கள். அந்த இடம் முழுவதும் ஒரே கோலாகலமாக இருந்தது.

சதீஷ் தன் கோழியை பந்தயத்தில் இறக்குவதற்காக கோழியின் காலில் கத்தியைக் கட்டினார். ஒரு பக்கமாக அமர்ந்திருந்து தன்னுடைய கோழிக்கான நேரம் வருவதற்காக காத்திருந்தார். மிக அதிக அளவில் வந்த மக்களை பார்த்து கோழி அச்சம் அடைந்தது.

அப்போது கோழியை நகராமல் அமுக்கிப் பிடித்துக் கொள்வதற்காக சதீஷ் முயற்சித்தார். அந்த நேரம் அதன் காலில் கட்டிய கத்தி சதீஷின் மர்ம உறுப்பை வெட்டியது. அதனால் அவருடைய ஆணுறுப்பு அறுந்து, காயம் அடைந்தார். மிகத் தீவிரமான காயத்தால் சதீஷ் துடிதுடித்து சாய்ந்தார்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

அங்கிருந்தவர்கள் அவரை அவசர அவசரமாக ஜெகத்யால மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே அவர் மரணமடைந்தார். சதீஷ்க்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இந்த விஷயம் அறிந்த குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் கண்ணீர் விட்டனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img