குழந்தைகளுக்கு 8 மாதம் முதல் கொடுக்க.. கின்வா கூழ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Quinoa - 2026

கின்வா கூழ்
தேவையான பொருட்கள்
கின்வா – 1 கப்
பால் – 3/4 கப்
இனிப்பு அல்லது உப்பு – தேவைக்கு
செய்முறை
கின்வாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். தீயை குறைத்து கிளறிக் கொண்டே இருக்க பொரிய தொடங்கும்
பொரியும் சத்தம் மெதுவாக அடங்கியதும் கின்வா வறுபட்டிருக்கும்

அதனை சூடு ஆறியதும் நன்றாக பொடித்து எடுத்து சுத்தமான குப்பியில் அடைத்து வைக்கலாம். 1 டேபிள்ஸ்பூன் கின்வா பொடியுடன் பால் கலந்து கைவிடாமல் கிளறி கூழ் பதம் வந்து 1 நிமிடம் கொதித்ததும் ஆறவிட்டு தேவைக்கு இனிப்பு அல்லது உப்பு சேர்த்து பரிமாறலாம்.

Quinoakuzh - 2026

குறிப்பு
கின்வா குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது. மற்ற பல உணவுகளில் கிடைக்கும் எல்லா சத்துக்களும் இதில் ஒன்றாக அடங்கியுள்ளது. இதனோடு வேக வைத்த ஆப்பிள்,கேரட்,நேந்தரன் பழம் அல்லது ராகி பொடி இப்படி பல பல விரும்பிய சுவைகளுக்கேற்ப மாற்றி சமைத்து கொடுக்கலாம். க்லூடென் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 8 மாதம் முதல் கொடுக்க ஆர்ம்பிக்கலாம். சத்து மாவு பொடிக்கையில் சிறிது இதனையும் வறுத்து பொடித்துக் கொள்ளலாம் அல்லது பெரிய குழந்தைகளுக்கு ஒன்றுக்கு இரண்டு பாகம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து சாதம் போல் சமைத்து கொடுக்கலாம். கொஞ்சமாக செய்து பாருங்கள் சில குழந்தைகளுக்கு இதன் சுவை பிடிக்காது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.