ஆரோக்கியம், சுவை.., குழந்தைங்களுக்கு ஏற்ற அத்திப்பழ அல்வா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Fig Alva - 2026

அத்திப்பழ ஹல்வா
தேவையான பொருட்கள்
பால் – 1 1/2 லிட்டர்
அத்திப்பழம் – 150 கிராம்
பேரீச்சம் பழம் – 3
நெய் – 150 கிராம்
சீனி – 400 கிராம்
பாதாம் – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பிஸ்தா – 25 கிராம்

செய்முறை

பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை இரு பாதியாக பிரித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு பாதியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மறுபாதி பருப்புகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

பாலை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.

அத்திப்பழம், பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பாலில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பழங்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து பாலில் போட்டு நன்கு காய்ச்சவும்.

பால் கொதித்து நன்கு வற்றி வரும் போது சீனியை சேர்த்து கிளறி விடவும்.

பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து கிளறவும்.

நல்ல கெட்டியாக வரும் போது தீயை மிதமாக வைத்து நெய்யை சேர்த்து கிளறி விடவும்.

ஹல்வா நன்கு கெட்டியாகி சுருண்டு வந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பருப்புகளில் சிறிதை சேர்த்து கிளறி இறக்கவும்.

பின் ஒரு டப்பாவில் நெய் தடவி அதில் ஹல்வாவை கொட்டி பரப்பி விடவும். மேலே மீதமிருக்கும் பருப்புகளை தூவி அலங்கரிக்கவும். சுவையான, சத்தான அத்திப்பழ ஹல்வா தயார்.

சில்வர் லீவ்ஸ் பேப்பர் இருந்தாலும் மேலே வைத்து அலங்கரிக்கலாம். நெய் சேர்த்த பின்னர் மேலே தெரிக்கும் கவனமாக கிளறவும். தீயை மிதமானதாக வைத்தே செய்யவும். அடிக்கடி அடியில் பிடித்துவிடாமல் கிளறி விடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.