ஆரோக்கிய சமையல்: கோதுமை-ரவா-ராகி மாவு வெல்லத் தோசை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
wheat rahi rava sweet dosai 1 - 2026

கோதுமை-ரவா-ராகி மாவு வெல்லத் தோசை
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒரு கப்
பாம்பே ரவை – அரை கப்
ராகி மாவு – அரை கப்
வெல்லம் – ஒரு கப்
ஏலப்பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை
வெல்லத்தை பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து பாகாய் காய்ச்சி கொள்ளவும்.
காய்ச்சின வெல்லப் பாகினை வடிகட்டி, ஏலப் பொடி மற்றும் மாவுகளைக் கலந்து கட்டித் தட்டாமல், தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து இதனை தோசையாக சுட்டெடுக்கவும்.
அதிகம் பரத்தாமல், சிறிய அளவு தோசையாக சுடவும்.
எண்ணெய்யுடன் சிறிது நெய்யும் கலந்து வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள இஞ்சித் தொக்கு பொருத்தமாய் இருக்கும்.

இது பழங்காலத்து இனிப்பு வகை. மிகவும் சத்தானது. ஆரோக்கியமானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.