ஆஸ்துமா இன்ஹேலருக்குள்.. அதிர்ச்சியான பெண்!

உலகம் சற்றுமுன்
inhaler 1 - 2026

ஆஸ்துமா இன்ஹேலருக்குள் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பிளி ப்லி என்னும் பகுதியில் வசித்துவரும் இளம் பெண் ஒருவர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்நிலையில் அதற்காக ஆஸ்துமா இன்ஹேலரை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

Snake 1 - 2026

இந்நிலையில் வழக்கம்போல் அந்த பெண் நேற்றும் தனது ஆஸ்துமா இன்ஹேலரை எடுத்து பயன்படுத்த முயன்றுள்ளார். அப்போது அவரது ஆஸ்துமா இன்ஹேலர் வழக்கத்தை விட சற்று அதிக எடையுடன் இருந்துள்ளது. இதனால் சந்தேகேமடைந்த அவர், ஆஸ்துமா இன்ஹேலரை திறந்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது ஆஸ்துமா இன்ஹேலர் உள்ளே சிறிய பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பாம்பு பிடிப்பவர்களை வீட்டிற்கு அழைத்து அந்த பாம்பை பிடித்துள்ளார். மேலும் அவர் அதிர்ஷ்டவசமாக பாம்பு கடியில் இருந்து தப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.