திருவண்வண்டூர் கோயில் அர்ச்சகரை அடித்துத் துவைத்த கம்யூனிஸ்ட் குண்டர்கள்!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

thiruvanvandoor archaka - 2026

கேரளத்தில், சபரிமலை விவகாரம் பிரச்னையை ஏற்படுத்திய பின்னர், ஆன்மிக இந்துக்கள் மீதான தாக்குதலை கேரளத்தின் கம்யூனிஸ்ட் குண்டர்கள் அதிகரித்திருக்கின்றனர்.

பல பகுதிகளிலும், இந்து இயக்கத் தொண்டர்கள் மீது, சிபிஐ மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கண்மூடித் தனமான தாக்குதலைத் தொடுக்கும் போது, போலீசார் கண்ணை மூடிக் கொண்டுள்ளனர். தவறியும் புகார்கள் கொடுக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப் பட்டால், கண் துடைப்புக்கு விசாரித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், திருவண்வண்டூர் கோயிலின் அர்ச்சகர் இன்று காலை தனது கோயிலுக்கு பூஜை செய்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த சிபிஐ எம் மற்றும் டிஒய்எஃப்ஐ குண்டர்கள், அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். அப்போது போலீஸார் அருகில்தான் இருந்துள்ளனர். இருப்பினும், போலீஸார் கண் எதிரிலேயே கோயில் புஜாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.