பயணிகள் முன்பே ஆடை அகற்றி அதிர வைத்த பெண்! விமானத்தில் பரபரப்பு!

உலகம் சற்றுமுன்
lady 2 2 - 2026

விமானத்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் தன்னுடன் பயணித்த சக பயணிகள் முன்பு ஆடைகளை கழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 30 வயது பெண்மணி ஒருவர் விமானத்தில் ஏறுவதற்கு முன் சின்தெடிக் போதை மருந்துகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவர் போதையில் சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட 15 நிமிடங்கள் கழித்து அந்தப் பெண்மணி விமானத்திற்குள் எழுந்து நின்று தனது ஆடைகளை அடிக்கடி கழற்றி மாற்றியுள்ளார். இதனால் விமான பணிப்பெண்கள் எவ்வளவோ எச்சரித்தும் அந்த பெண் பயணி கேட்காததால் அவரது இருக்கையில் கட்டி வைத்துள்ளனர்.

விமானம் தரையிறங்கும் வரை இருக்கையில் கட்டிய நிலையில் பயணித்து வந்த அந்த பெண்ணை விமானம் தரை இறங்கிய பின் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் போதை மருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.