அதிர்ச்சி! ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு தொற்று!

கல்வி சற்றுமுன் தமிழகம்
corona-test
corona-test

அம்மாபேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையில் இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாஸ்க் அனியாவிடில் சிறை, இ-பாஸ் கட்டாயம், மாஸ்க் கட்டாயம் உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் கையிலெடுத்துள்ளனர்.

குறிப்பாக, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பள்ளிகளில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, மேலும் 36 மாணவிகளுக்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்க அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

பள்ளியில் கொரோனா அதிகரித்து வருவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென ஆட்சியர் கோவிந்தராஜ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + thirteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.