பெட்ரோல் போடும் கேப்பில் ஆடிய ஆட்டோ டிரைவர்! திறமை வைரலானதால் சினிமாவில் வாய்ப்பு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் சினிமா
auto driver - 2026

நடன கலைஞர்களையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு, ஆட்டோ டிரைவர் ஒருவர், லவானி நடனத்தை அட்டகாசமாக ஆட, நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கினர். அவருக்கு மராத்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அந்த வீடியோ பெற்றுத் தந்திருக்கிறது.

புனேவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாபாஜி காம்ப்ளே எப்வர், மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற நாட்டுப்புற நடன வடிவமான லவானி நடனத்தை, அசத்தல் நடிப்புடன் ஆடி காட்ட, நெட்டிசன்களின் இதயங்களை அந்த வீடியோ வென்றது. பாரமதி தாலுகாவைச் சேர்ந்த பாபாஜி காம்ப்ளே, தனது ஆட்டோவுக்கு எரிபொருள் நிரப்ப எரிவாயு நிலையம் சென்றிருந்தார்.

அப்போது அங்கு கூட்டம் அலைமோத, நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அவரது சக ஆட்டோ டிரைவர்கள், பாபாஜியிடம் நடன திறமையை காட்டும்படி கூற, பிரபல பாடலான ‘மாலா ஜூ தியானா கரி.’ என்ற பாடலுக்கு, அற்புதமாக நடனமாடினார். 3.50 நிமிட நீளமுள்ள இந்த வீடியோவை, மகாராஷ்டிரா தகவல் மையத்தின் துணை இயக்குநர் தயானந்த் காம்ப்ளே, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

பயிற்சியளிக்கப்பட்ட நடனக் கலைஞரைக் கூட வெட்கப்பட வைக்கும் ஒரு அழகான லாவானி நடனத்தை, நெட்டிசன்கள் பலரும் ரசித்து பார்க்க, அந்த வீடியோ வைரலானது. மராத்தி பட இயக்குனர் கன்ஷ்யம் விஷ்ணுபந்த் யெடேவை இந்த வீடியோ கவர, காம்ப்ளேவுக்கு, தனது படத்தில் ஒரு கதாபாத்திரத்தை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். 4400க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ள இந்த வீடியோவை, 500க்கும் மேற்பட்டோர் ரீடுவிட் செய்திருக்கின்றனர். அவரது நடன திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.