முதலிரவில் காத்திருந்த கணவன்! லைட்டை அணைத்து கட்டையால் தாக்கிய‌ மணப்பெண்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
firstnight
firstnight

முதலிரவில் கணவனை தாக்கி விட்டு, நகையுடன் காணாமல் போன மணப்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள் .

உத்தரபிரதேசம் பிஜ்னோரில் உள்ள குர்தா கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞர்,,கல்யாண தரகர் மூலம் தனக்கு ஒரு மணப்பெண்ணை பார்க்க சொன்னார். அதன் படி அந்த தரகர் ஹரித்துவாரில் வசிக்கும் ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கடந்த மார்ச் 15 ம் தேதியன்று ஒரு கோவிலில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் அன்று இரவு அந்த மாப்பிள்ளை முதலிரவில் மணப்பெண்ணுக்காக காத்திருந்தார். அவர் முதலிரவை அந்த பெண்ணோடு சந்தோஷமாக கழிக்க எண்ணி காத்திருந்தார். அப்போது அந்த பெண் கையில் பால் சொம்போடு வராமல் ஒரு கட்டையை எடுத்து கொண்டு வந்தார் .

அதை பார்த்து அந்த மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு அந்த பெண் விளக்கை அணைத்துவிட்டு அவரை அந்த கட்டையால் தாக்கி விட்டு அவர் மயக்கமானதும் அங்கிருந்த 2 லட்சம் திருமண நகை பணத்துடன் தப்பியோடி விட்டார்.

பின்னர் மயக்கம் தெளிந்த அந்த மாப்பிள்ளை இந்த விஷயத்தை வெளியே இருந்த உறவினர்களிடம் கூறினார். அவர்கள் அதை கேட்டு அதிர்ந்தனர். உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மணப்பெண்ணை தேடி வருகிறார்கள்.‌ இந்த திருமணத்தை நிர்ணயித்த மேட்ச்மேக்கரும் தலைமறைவாக உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.