சிக்கிய எலும்புக்கூடு.. 2 வது மனைவியைக் கொன்று 3 வது மனைவியோடு வாழ்க்கை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Skeleton - 2026

வீட்டை பராமரிக்க தோண்டும்போது எலும்பு கூடுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஹ்சன் சைஃபி,என்ற நபர் உத்தரபிரதேசத்தின் படோஹியில் உள்ள காஷிராம் அவாஸ் காலனியில் உள்ள சிவ் நகர் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் அவரோடு வாழும் வாழ்க்கை போர் அடித்ததால் அஹ்சன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் திருமணம் செய்து கொண்ட நஸ்னீன் என்ற பெண் மற்றும் அவரது 14 வயது மகனுடன் முதல் மனைவிக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவருக்கு முதல் மனைவியும் அதன் மூலம் குழந்தைகள் இருக்கும் விஷயம் இரண்டாவது மனைவிக்கு திருமணதிற்கு பிறகு தெரிய வந்ததை அடுத்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், முதல் மனைவியையும் அவரின் குழந்தைகளையும் பார்க்க கூடாது என்று கூறியதால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டாவது மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டை வாங்கிய மற்றோரு நபர் வீட்டை பராமரிக்க தோண்டியபோது எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு இதை பற்றி காவல் துறையில் புகார் அளித்துள்ளதை அடுத்து போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இது அஹ்சன் செய்த கொலைகள் என்று கண்டுபிடித்து மூன்றாவது கல்யாணம் செய்து வாழ்ந்த அஹ்சனை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.