வாரிசு பேச்சிலும்.. மீண்டும் தயாநிதி தரம் தாழ்ந்த பேச்சு!

சற்றுமுன் தமிழகம்
dhayanithi maran - 2026

தொடர்ந்து திமுகவினர் தங்களது தரம் தாழ்ந்த பேச்சால் மக்களிடையே அதிருப்தியை அதிகரித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி மணல் அள்ளுவோம் என்றார். லியோனி பெண்களின் உடலமைப்பை கிண்டலடித்தார். ஆ.ராசா ஒருபடி மேலே போய் தகாத வார்த்தைகளை முதல்வர் மீது வீசினார். இதெற்கெல்லாம் எதிர்ப்பு வந்து அடங்கும் முன்பே தயாநிதி மாறன் அடுத்து ஒரு வக்கிரத்தை உமிழ்ந்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் வாரிசு என்று இப்படித்தானே நிருப்பிக்க முடியும். ஊழலிலும் கண்ணியமற்ற வார்த்தைகளாலும் திமுக தரம் தாழ்ந்த கட்சி என்று மக்களுக்கு உணரவைத்து வருகின்றனர்.

அமைச்சர் இராஜேந்திர பாலாஜி மோடியை தந்தை என்பதைக் குறிப்பிட்டதை சுட்டி இதனைக் கூறியுள்ளார் தயாநிதிமாறன்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார். என்ன உறவுமுறை பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள். இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.

பெரியாரை தந்தை என்கிறீர்களே? ஏன் என் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தந்தை உறவு பற்றி உங்கள் குடும்பத்தையும் கட்சியையும் தான் கேட்க வேண்டும். என்றும் நக்கல் அடித்து வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு செய்த நல்லவைகளை கூறி ஓட்டு கேட்க முடியாமல் அடுத்த கட்சியை பற்றியும் கட்சித் தலைவர்களைப் பற்றியும் கீழ்த்தரமாக பேசி ஓட்டு கேட்டு தரம் தாழ்ந்த அரசியல் செய்வதை தான் இத்தனை கால ஆண்டாக திராவிட கழகம் கற்றுத் தந்ததா? என கேள்வி எழுப்புகின்றனர். நல்லது செய்தால் தானே சொல்லி காட்டுவதற்கு என்றும் மக்கள் பரவலாக பேசுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.