அதிமுக., தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம்!: பாஜக., தலைவர் நட்டா நம்பிக்கை!

சற்றுமுன் சென்னை
jbnadda - 2026

தமிழகத்தில், அதிமுக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என பாஜக., தேசிய தலைவர் நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜே.பி. நட்டா கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அதிமுக அரசின் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மே.வங்கத்தில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், பாஜக., வெற்றி பெறுவதற்கான அறிகுறி தெரிய வந்துள்ளது.

அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நீடிக்கும். புதுச்சேரியில், நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான தெளிவான சூழ்நிலை உருவாகி உள்ளது.

கேரளாவில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக., வளர்ந்துள்ளது. கேரளாவில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தவறான நிர்வாகத்தால், நாங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளோம். மக்கள் பாஜக.,வை ஆதரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் எங்களால் கேரளாவிற்கு நாங்கள் நல்லது செய்ய முடியும்.

நாங்கள் மதவாத கட்சி என முத்திரை குத்துகின்றனர். ஆனால்,உண்மையில் காங்கிரஸ் தான் கேரளாவில் முஸ்லிம்லீக் கட்சியுடனும், அசாமில் பத்ருதீனுடனும் கூட்டணி வைத்துள்ளது. எனவே யார் மதவாத கட்சி என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்… என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.