
அனைத்து iOS பயனர்களுக்கும் Google Mapsயிற்கான டார்க் மோட் அம்சத்தை Google வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது இப்போது அனைத்து பயனர்களுக்கும் வெளிவரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. கூகுள் மேப்ஸின் ஆண்ட்ராய்டு பதிப்பில் டார்க் மோட் அம்சம் ஏற்கனவே உள்ளது. இப்போது iOS பயனர்களும் அதை அனுபவிக்க முடியும்.
கூகுள் மேப்ஸ் டிஃபால்டாக Light Modeயைப் பயன்படுத்தும். எனவே உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்களே டார்க் மோடை கைமுறையாக இயக்க வேண்டும். இந்த அம்சம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி ஆயுளைச் சேமிக்க அனுமதிக்கிறது.
iOS இல் கூகுள் மேப்ஸில் டார்க் மோடை இயக்குவது எப்படி?
- உங்கள் iOS சாதனத்தில் Google Maps ஆப்ஸைத் திறக்கவும்.
- உங்கள் ப்ரொஃபைல் படத்தை கிளிக் செய்யவும்.
- Settings விருப்பத்தைத் தட்டவும்.
- டார்க் மோடுக்கு கீழே ஸ்க்ரோல் செய்து அதன் மீது கிளிக் செய்யவும்.
- இங்கே நீங்கள் ஆன், ஆஃப் மற்றும் சேம் அஸ் டிவைஸ் போன்ற ஆப்ஷன்களை காண்பீர்கள். இவற்றில் ஒன்றை தேர்வு செய்யவும்.
iOS இல் Google Maps மூலம், iMessage பயன்பாட்டைப் பயன்படுத்தி லைவ் லொகேஷனை பகிரும் திறனையும் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது. iMessage இல் உள்ள Google Maps பட்டனைத் தட்டுவதன் மூலம் பயனர்கள் லைவ் லொகேஷன்களைப் பகிர முடியும்.
மேலும் டிஃபால்டாக ஒரு மணி நேரமும், மூன்று நாட்கள் வரை நீட்டிக்கும் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. ஷேரிங்கை நிறுத்த, பயனர்கள் சிறுபடத்தில் உள்ள ‘Stop’ பட்டனைத் தட்டலாம்.