அள்ளிக் கொடுத்த அஜித்! ரூ. 0.25 கோடி நிவாரண நிதி!

சற்றுமுன் சினிமா தமிழகம்
ajith 2
ajith 2

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள்.

தல அஜித் Rs.0.25 கோடி நிதி வழங்கியுள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள திமுக கட்சி, தற்போது நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எனினும் போதிய அளவில் தடுப்பூசி இல்லை என்கிற தகவலும் வெளியாகி வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவால் தமிழகம் மற்றும் புதுவையில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது.

ajith 1
ajith 1

முதல் அலையை விட, இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, மே 10 ஆம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜித், ரூ.0.25 கோடி முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். பிறரைப் போல், அவர் இதனை நேரடியாகச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல், வங்கியின் ஆர்.டி.ஜி.எஸ் சேவை மூலம் ட்ரான்ஸ்பர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

அஜித் பலவிதமான உதவிகளை சத்தமில்லாமல் படாடோபம் இல்லாமல் கொடுப்பது மற்றொரு கை அறியா வண்ணம் செயல்படுபவர். குடும்பமே சினி உலகில் இருந்தும் சிறியத் தொகையளித்து விளம்பரம் தேடும் நடிகர்களிடையே அஜித் எப்பொழுதும் போல் தனி ஒருவராக அள்ளி வழங்கியுள்ளார்.

இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் போதிய மருத்துவ உபகாரணங்களுக்காக, அடுத்தடுத்து பல பிரபலங்கள் உதவி செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.