ஆனால் வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதில்லை என்ற மரபை 2004 ம் ஆண்டில் இருந்து இந்திய அரசு பின்பற்றி வருகிறது! டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சரவைக் குழு எடுத்த இந்த முடிவின் விளைவாக அமெரிக்க அரசு அளிக்க முன் வந்த சுனாமி நிவாரண நிதியை இந்திய அரசு நிராகரித்து உள்ளது!
உத்தரகண்ட் மழை வெள்ளத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் அளிக்க முன் வந்த நிவாரண நிதியையும் மன்மோகன் சிங் அரசு நிராகரித்து உள்ளது!
இந்த நிலையில் கேரள முதல்வர் விஜயன் ஐக்கிய அரபு அமீரகம் அளிக்க விரும்பும் 700 கோடி நிதி உதவி பற்றி தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்
அரச குடும்பத்தினருக்கும் நீண்ட பாராட்டை தெரிவித்துள்ளார்! வெளிநாடுகளின் நிவாரண உதவிகள் தொடர்பாக 2004 முதல் இந்திய அரசு பின்பற்றி வரும் மரபைப் பற்றி கேரள முதல்வருக்கு தெரியாதா? தெரியாது என்று தோன்றவில்லை!
கருத்து: வசந்தன் பெருமாள் Vasanthan Perumal




