பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மரணம்!

இந்தியா சற்றுமுன் சினிமா
pa raju
pa raju

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூ மாரடைப்பால் காலமானார்.

தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர், சீனியர் சினிமா பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். சண்டிகாடு, பிரேமிக்குலு, லவ்லி, விஷகம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு ராஜமவுலி, மகேஷ் பாபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி தெலுங்கு இண்டஸ்ட்ரியின் பழைய வரலாறுகளைத் தேடித் தேடி கலெக்ட் செய்து பொக்கிஷமாய் பாதுகாத்து வந்தவர் ராஜூ. மேலும் கோலிவுட்டுக்கும் பாலமாக இருந்தவர். ஒரு பி ஆர் ஓ-வாக இருந்து புரொடியூசராக அவதாரம் எடுத்தவர்.

தெலுங்கு சினிமாவில் சகல நடிகர், நடிகைகளையும் தெரிந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவியவர் இவர். அதே சமயம் டோலிவுட் சினிமா ரிப்போர்ட்டர்கள் எந்தச் செய்தியை எந்நேரம் கேட்டாலும் உள்ளது உள்ளபடி வழங்கியவர்.

அப்பேர்ப்பட்டவரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளான தெலுங்குப் பத்திரிகையாளர்கள் ராஜூவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றொரு நாள் எந்த சினிமா செய்தியையும் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்துகிறார்கள்.

அவருக்கு அஞ்சலியாக #RIPSir என்றும் #RIPBaRajuGaru எனவும் பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.