கர்நாடக ஸ்பெஷல்: மாம்பழ கொத்சு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
manko kots
manko kots

மாம்பழ கொத்சு

தேவையானவை:

மீடியமாக பழுத்த மாம்பழம் – ஒன்று
புளிக் கரைசல் (நீர்க்க இருக்க வேண்டும்) – கால் கப்
வெல்லம் (விரும்பினால்) – சிறிதளவு
மஞ்சள்தூள், கடுகு, எண்ணெய், உப்பு – சிறிதளவு
வறுத்துப் பொடிக்க:
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
துருவிய கொப்பரை – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்க்கவும். கொதி வந்தவுடன் மாம்பழத் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, மீண்டும் கொதி வந்தவுடன் வறுத்து பொடித்த மசாலா சேர்த்து… மேலும் ஒரு கொதி வரவிட்டு (விரும்பினால் வெல்லம் சேர்த்து), இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.