
தேங்காய் – தனியா ஆமவடை
தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம்
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய கொப்பரை (அ) தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 2
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு (உருவியது)
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
சீரகம், பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 200 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து… உப்பு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங் காயத்தூள்சேர்த்து, மாவை வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்