December 8, 2025, 10:00 AM
25.3 C
Chennai

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் பாதுகாப்பிற்கு..!

apps - 2025

இந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு என்பது பிரதான ஒன்றாகும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது சுற்றுப்புறத்திடம் இருந்து இல்லை, நம்மோடு ஒன்றி உறவாடும் மொபைல்களிடம் இருந்து தான்.

நாம் என்ன அவ்வளவு பெரிய ஆளா, நம்மிடம் அத்தனை பெரியத் தொகையெல்லாம் ஒன்றுமில்லை எனவே நம்மையா ஹேக் செய்யப்போகிறார்கள் என்று எண்ணக் கூடாது. ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹேக்கர்கள் எப்படி வேண்டும் என்றாலும் ஊடுருவார்கள், லிங் அனுப்பி அதன்மூலம் தகவலை திருடுவது, வெவ்வேறு பயன்பாடுகளாக ஆப்ஸ்களை உருவாக்கி அதை நிறுவச் செய்து அதன் பேரில் மொபைலில் ஊடுருவி தகவலைத் திருடுவது என பலவகைகளில் ஹேக்கர்கள் புகுந்து விளையாடுவார்கள்.

நமது ஒவ்வொரு தகவலின் பாதுகாப்பு என்பது நமது கடமையாகும். மிகப் பெரிய பிரதான பயன்பாடுகளும் இதுபோன்ற சிக்கலில் மாட்டி இருக்கின்றனர், பின் அதை சரி செய்தும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

app - 2025

மொபைல் பயன்பாடு பிரதானமாக மாறி வருகிறது. இதை தவிர்த்துவிட்டு நம்மால் இந்த காலக்கட்டத்தில் பயணிக்க முடியாது, ஆனால் அதனிடம் இருந்து நாம் பாதுகாப்பாக பயணிக்கலாம். அதே சமயத்தில் மொபைல் போனின் சில பயன்பாடுகளின் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

இதில் பிரதான மற்றும் குறிப்பிடத்தக்க பயன்பாடாக I’m Safe என்பது பெண்கள் பாதுகாப்பு செயலியாக இருக்கிறது. இதுபோன்ற பல செயலிகளும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

இதை கண்டறிந்து பயன்படுத்துவது அவசியமாகும். இது பாலியல் துன்புறத்தல்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த பயன்பாடானது பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. இந்த பயன்பாடானது உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு இன்றியமையாத தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த செயலியில் உள்ள கீழே வழங்கப்பட்டுள்ள அம்சம் என்பது மிக முக்கியமாக இருக்கிறது. இருப்பினும் இந்த அனைத்து பயன்பாடுகளும் தனித்தனியாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“Track Me” என்ற அம்சம் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு தங்கள் இருப்பிடம் குறித்த தகவலை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. நேரம் காலம் பார்க்காமல் பணி போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதுபோன்ற சூழலில் பாதுகாப்புக்கு என எப்போதும் ஒருவரை எதிர்பார்க்க முடியாது. எனவே நமது பாதுகாப்பை இந்த அம்சத்தின் மூலம் உறுதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

app for women - 2025

இந்த பயன்பாட்டில் ஐந்து விருப்பமானவர்கள் வரை இணைக்கலாம். இந்த பயன்பாட்டில் “என்னைக் கண்காணிக்கவும்” என்ற பட்டன் இருக்கிறது. இதை கிளிக் செய்வதன் மூலம் நமது விருப்பமானவர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.

இது ஜிபிஎஸ் டிராக் போன்ற பயன்பாடாகும். மேலும் இந்த அம்சத்தில் “எப்போதும்” என்ற விருப்பம் இருக்கிறது. இதை கிளிக் செய்தால் ஒருவர் எப்போதும் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்க முடியும்.

இதில் உள்ள SOS பயன்பாடானது ஒருவர் அவசரநிலையில் இருக்கும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பி தன்னை தற்காத்துக் கொள்ளலாம். ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் நம்பகமான ஒருவருக்கு விழிப்பூட்டலை அனுப்ப முடியும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த எஸ்ஓஎஸ் பயன்பாட்டை இயக்கிய உடன் தங்களை சுற்றி குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் ஒலியை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

அதோடு இந்த பயன்பாடை இயக்கிய உடன் கேமரா தானாக ஓபன் செய்து புகைப்படங்களை பதிவு செய்கிறது. தவறாக எஸ்ஓஎஸ் பட்டன் அழுத்தப்படும் பட்சத்தில் ஐந்து வினாடிகள் அவகாசம் வழங்கப்படும் அதை ரத்து செய்வதற்கு.

தங்களது மொபைலில் பேக்கிரவுண்ட் செயல்பாடு, அதாவது மொபைலை பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும் குறிப்பிட்ட செயலிகள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். தாங்கள் நோட்டிபிகேஷன் பெறும் அனைத்து செயலிகளும் பேக்கிரவுண்ட் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை குறைப்பது மிக நல்லது. இதில் உள்ள பேட்டரி ஆப்டிமைசேஷன் என்ற பயன்பாடானது தேவையில்லாமல் பேக்கிரவுண்டில் செயல்படும் செயலியை நிறுத்த உதவுகிறது. அதோடு பேட்டரி சார்ஜிங்கை மிச்சப்படுத்தலாம்.

டேட்டா பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது சேகரித்து வைத்திருக்கும் தரவுகளை தனித்துவமாக பாதுகாக்கிறது. இதில் உள்ள டேட்டா பாதுகாப்பு அம்சத்தின் மூலம் தங்கள் தரவுகள் அனைத்தும் குவாண்டம் லெட்ஜர் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகிறது.

இதில் தங்களை தவிர வேறு யாராலும் உங்கள் சேமிப்பு தரவுகளை கையாள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories