
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற பழமொழியும் இலுப்பையின் அவசியத்தை உணர்த்துகிறது.
இலுப்பைப்பூவையும், பழத்தின் சதைப்பகுதியையும் நொதிக்க வைத்துச் சோமபானம் தயாரித்தனர். அது, உடல் நலனுக்குத் தீங்கு ஏற்படுத்தாத மதுவாக இருந்தது. இன்றும் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இதை விரும்பிக் குடித்துவருகிறார்கள். இந்தப் பகுதிகளில் இலுப்பையிலிருந்து தயாரிக்கும் பானமே பிரதான மதுவாக இருக்கிறது. இதற்காக, வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இலுப்பைப்பூக்களை வாங்கி வந்து மது தயாரிக்கிறார்கள்.
இலுப்பைப்பூ தன்னுள் அதிக அளவு புரதச்சத்து., கால்சிய சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து கொண்டது. இதன் மூலமாக நமது உடலில் ஏற்படும் சரும நோய்கள்., தலைவலி., விஷக்கடி., மலச்சிக்கல்,, மூலநோய் நீரிழிவு நோய்., டான்சில், சளி, இருமல், ,பாம்புக்கடி, வாத நோய், வயிற்றுப் புண், சுவாசக் கோளாறு, காயம் மற்றும் இருதய நோய்களைத் தீர்க்கும் ஆற்றலை தன்னுள் கொண்டது. அந்த வகையில். இலுப்பைப்பூவின் மருத்துவக்குணங்கள் ஆனது நமது உடலிற்கு ஆரோக்கியமான
நன்மைகளை ஏற்படுத்துகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.
கரப்பான் பூச்சி., பெரிய விஷக்கடி போன்ற கொடிய கொடிய விஷத்திற்கு இலுப்பைப் பூ நெய்யினை தடவினால் விஷம் உடனடியாக முறிந்து., நமது விஷத்தின் பாதிப்பிலிருந்து உடலானது பாதுகாக்கப்படும். நமது உடலில் திடீரென உண்டாகும் காய்ச்சல் மற்றும் அடிக்கடி தாகம் எடுப்பது., ரத்தச் சர்க்கரை நோய் ஆகிய பிரச்சனைகளுக்கு எளிய முறை தீர்வாகவும் இலுப்பைப் பூஉதவுகிறது
உடல் தேறும்
இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.
ஆண்மைக்குறைவு
ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வதுமுண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க இலுப்பை பூவின் வேறை பொடியாக்கி பாலில் சேர்த்து குடித்து வந்தால்., உயிரணுக்களின் உற்பத்தியை
அதிகரித்து உயிரணுக்களின்
வீரியத்தை அதிகரிக்கிறது.
இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் பசியுண்டாக்கும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் காமம் பெருக்கும் தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும் நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் மிகுக்கும். இதன் பட்டை காயம், தோல் நோயைக் குணமாக்கும், பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும். இது தலைவலியைப் போக்கும். நீரிழிவைக் குணமாக்கும்.