வலிமை அப்டேட்: படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதமே வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மீதமுள்ள படப்பிடிப்புகள் இம்மாதம் ஹைதராபாத்தில் தொடங்கி மொத்தமாக முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை வெகு விரைவில் வெளியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.