October 22, 2021, 4:03 pm
More

  ARTICLE - SECTIONS

  அனைத்திற்கும் தீர்வாய் அருகம்புல்!

  arukampul - 1

  அருகம் புல் என்றாலே நினைவிற்கு வருவது விநாயகர். பசுமையான மெல்லிய நீண்ட கூர்மையான இலைகள். ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் என தென்படும் இடங்களில் வளர்ந்து காணப்படும் இந்த அருகம் புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

  வேதிபொருட்கள்: மாவுச்சத்து, உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், கொழுப்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், பி.சிட்டோஸ்டர், கார்போஹைட்ரேட், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி’ சத்தும் அடங்கியுள்ளன.

  அருகம் புல்லில் உள்ள வேர், இலைகள் உட்பட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அளிக்க வல்லது.

  அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்க்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும்

  அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது. அருகம்புல்லை கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.

  அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்து வர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.

  அருகம்புல்லில் நீர் விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும் போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.

  அருகம்புல் சாறு 100 மி.லி. அளவுக்கு குடித்து வர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

  கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும். வெள்ளைப்போக்கு, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். அருகம்புல் சாறு 50 மி.லி. எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டித் தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

  அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்கக்கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.

  தேவையான பொருட்கள்

  அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய்.

  செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்தவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.

  பயன்கள்: இது உடல் வெப்பத்தை குறைக்கும், வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது.

  கை கால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய அருகம்புல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.

  arukampul juice - 2

  தினமும்ல‌காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வர வேண்டும். இந்த சாற்றை குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகே உணவு உட்கொள்ள‍ வேண்டும். இவ்வாறு உட்கொண்டு வந்தால் குணமாகும் நோய்களின் பட்டியலை கீழே காணலாம்.

  1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். 3. வயிற்றுப் புண் குணமாகும். 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குண மாகும். 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். 7. நரம்பு த்தளர்ச்சி, தோல்வியாதி ஆகியவை நீங்கும். 8. மலச்சிக்கல் நீங்கும். 9. புற்றுநோய்க்கு நல்ல மருந்து. 10. உடல் இளைக்க உதவும். 11. இரவில் நல்ல தூக்கம் வரும். 12. பல், ஈறு கோளாறுகள்நீங்கும். 13. மூட்டுவலி நீங்கும். 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

  நச்சு நீக்கி
  நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று என அனைத்தும் இக்காலத்தில் நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. அருகம்புல் ஜூஸ் தினந்தோறும் காலை அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் அதனை நச்சுக்களும் வியர்வை, சிறுநீர் மூலமாக வெளியேறும்.

  உடலில் இன்சுலின் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.

  பசி உணர்வு
  ஒரு சிலருக்கு எவ்வளவு உணவை உண்டாலும் பசி அடங்காமல் இருக்கும். மேலும் அதிகமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால் அதீத பசியை கட்டுப்படுத்தும்.

  எலும்புகள் நலம்
  அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்கு தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன. அருகம் புல் ஜூஸ் தினந்தோறும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்கும்.

  சுவாச பிரச்சனைகள்
  ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்றவை நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது துன்புறுவர். இவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  மூலம்
  மலத்துவாரத்தின் தோலின் ஒரு ஓரத்தில் ஒரு புடைப்பு போல் ஏற்படுவது மூலம் எனப்படும். மூல நோய் பல வகைப்படும். எப்படிப்பட்ட மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அருகம்புல் ஜூஸ் அருந்தி வருவது சிறந்த நிவாரணம் அளிக்கும்.

  வாதம்
  மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சிலருக்கு முகவாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அருகம்புல் ஜூஸ் அருந்தி வருபவர்களுக்கு நரம்புகள் வலுப்பெற்று எப்படிப்பட்ட வாத நோய்களும் ஏற்படாமல் காக்கும்.

  உடல் எடை
  இன்றிருக்கும் அவசர வாழ்க்கை முறை மற்றும் கட்டுப்பாடுகளில்லாத உணவு முறைகளால் பலருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறையும்.

  அருகம் புல்லை சிறிதளவு எடுத்து தலையில் வைத்து கட்டிக் கொண்டால் கபால சூடு தணியும்.

  எலும்பிச்சை பழ அளவு அருகம் புல் பசையை பசுந்தயிரில் கலந்து தினமும் காலையில் குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

  கொதிக்க வைத்த நீரில் ஒரு துளசி இலையுடன் அருகம் புல்லை சிறிதளவு போட்டு மூடி வைத்து பின் அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வர சீதள மற்றும் சளித்தொல்லை நீங்கும்.

  ஞாபக சக்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

  வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம்.

  அருகம்புல், தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தும் வல்லமை மிகுந்தது.

  நுண் கிருமிகள் பலவகையானவற்றை தடுத்தல், ரத்தத்தில் பிராணவாயுவை அதிகரித்தல், மாரடைப்பை தடுக்க உதவுதல், கிருமி தொற்றினை குறைத்தல், கருத்தடைக்கு உதவி செய்தல், உடலை குளிர்ச்சியாக வைத்திருத்தல், ஆகியவற்றில் பங்காற்றுகிறது.

  பற்களில் உள்ள ஈறு பகுதியில் ஏற்படும் இரத்தக்கசிவு பிரச்சனையை சரி செய்து, பற்களை உறுதியாக்குகிறது. வாய்
  துர்நாற்றத்தை நீக்குகிறது நச்சுப்பொருட்களால் ஏற்படும்
  புற்றுநோயினை தடுக்கும் ஆற்றல்
  அருகம்புல்லுக்கு உண்டு.

  அருகம்புல் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்த பசுவினுடைய பாலோடு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம், தலைவலி நீங்கிவிடும்

  ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, கண் சம்பந்தமான நோய் நீங்குவதற்கு அறுகம்புல் சாறுடன் தண்ணீர் விட்டு காய்ச்சி பிறகு வடிகட்டி, டைமண்ட் கற்கண்டு கலந்து குடித்தால் மேற் கண்ட வியாதிகள் நீங்கிவிடும்.

  பசும்பாலினைக் கலந்து சாப்பிட வேண்டும். வெட்டை சம்பந்தமான வியாதிகள் குணமாக இதன் வேரோடு மாதுளம் பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் இவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கசாயம் செய்து காய்ச்சி 3 நாட்கள் சாப்பிட்டுவர இந்த வியாதிகள் குணம் ஆகும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,577FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-