டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வீரர்களின் காதலுக்கு தடை! படுக்கையே படு பயங்கரம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
tokyo olympics - 2026

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காதல் எதிர்ப்பு படுக்கைகள்.
வீரர்கள் ரொமான்ஸில் ஈடுபடுவதைத் தடுக்க சூப்பர் ஐடியா!

ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கும் உலக விளையாட்டுப் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் தயாராகி வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் நிர்வாகம் தம் கடமையை நிறைவேற்றுவதில் கத்தி மீது நடப்பது போல் உணர்ந்துள்ளது.

இந்த நிலையில் நிர்வாகத்தினர் விளையாட்டு வீரர்களிடையே காதல் கட்டுப்பாடு விதிக்க ஒரு புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளனர்.

கொரோனா பின்னணியில் விளையாட உள்ள வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க இருக்கும் அறைகளில் வித்தியாசமான படுக்கைகளை அமைத்துள்ளனர். அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட படுக்கைகளை வீரர்களின் அறைகளில் வைத்துள்ளனர்.

இது வீரர்களின் காதல் விளையாட்டைத் தடுக்கும் என்பது அவர்களின் கருத்து. ஒலிம்பிக்கின் முடிவில் இவை மறுசுழற்சி செய்யப்பட்டு காகித தயாரிப்புகளாக மாற்றப்படும். வீரர்களிடையே உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜூலை 24 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு 18,000 படுக்கைகள் தேவை. பாரா ஒலிம்பிக்கிற்கு 8,000 படுக்கைகள் தேவை.

இந்த படுக்கைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இது குறித்து நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை 200 கிலோ வரை எடையைத் தாங்கக் கூடியதாக உள்ளன என்று தெரிவிக்கும் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் பாலியல் எதிர்ப்பு படுக்கைகள் பற்றிய கதைகளை நிராகரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.