பிரபல நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை
Venu aravind - 2026

பிரபல சின்னத்திரை நடிகரும் கலைமாமணி விருது பெற்றவருமான வேணு அரவிந்த் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் பாலச்சந்தரின் அலைகள் தொடரின் மூலமாக பலரும் அறிந்த நபரானார். சபாஸ் சரியான போட்டி என்ற திரைப்படத்தினை இயக்கி நடித்தார்.

இவர் காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் சோபா என்பவரை மணந்தார். இத்தம்பதிகளுக்கு வீணா மற்றும் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் பக்கவாதத்தால் தாக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் கொரோனா தொற்றினாலும் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சையில் இருந்து குணமாகி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.