புதரில் கிடந்த பெண் குழந்தை!

சற்றுமுன் தமிழகம்
baby - 2026

பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை புதரில் இருந்து பொதுமக்கள் கண்டெடுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் சிவன் தியேட்டர் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை வீசப்பட்டிருந்தது. குழந்தை அழும் சப்தம் கேட்டு அப்பகுதியினர் சென்று பார்த்த போது பிறந்த குழந்தை புதர் பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

தகாத உறவால் பிறந்ததால் விட்டு சென்றார்களா அல்லது பெண் குழந்தை என்பதால் விட்டு சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.