
இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தை எளிதாக்க மத்திய அரசின் மற்றொரு முயற்சியில், CoWIN போர்ட்டலில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது,
அதில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடுப்பூசி நிலையை சரிபார்க்கலாம்.
இது குறித்து சமூக ஊடக தளமான ட்விட்டரில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், CoWIN புதிய சேவையை செயல்படுத்தியுள்ளதாக அறிவித்தது,
இது குடிமக்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பெயரைப் பதிவு செய்து, OTP மூலம் தடுப்பூசி நிலையை சரிபார்க்க அனுமதிக்கும்.
இப்போது cowin.gov.in இலிருந்து முழுமையாக அல்லது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட விவரத்தை பதிவிறக்கம் செய்து, உங்கள் எல்லா சமூக தளங்களிலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது உங்களைப் பின்தொடரும் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஊக்குவிக்கவும் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
பயண முகமைகள், அலுவலகங்கள், முதலாளிகள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் அல்லது IRCTC போன்ற அரசு நிறுவனங்கள் போன்ற சேவை வழங்குபவர்கள் தங்களிடம் வருபவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? இல்லையா? என இனிமேல் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
தடுப்பூசி சான்றிதழ்களை டிஜிட்டல் அல்லது காகிதத்தில் பெறாத குடிமக்கள் குறிப்பிட்ட சேவையைப் பெறுவதற்கு உதவுவதற்காக இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதல் கோரும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அனுமதியின்படி குடிமக்களின் தடுப்பூசி நிலை டிஜிட்டல் பதிவைச் சரிபார்க்க சேவை வழங்குநர்களுக்கு இது உதவும்.
மேலும் கொரோனோவில் இருந்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும், ஊக்கப்படுத்தவும் உதவும்.