
புனே-வை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் விஞ்ஞானிகள், ரேடியோ தொலைநோக்கி மூலம் மிகவும் அரிதான ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் வகையைச் சார்ந்த எட்டு நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவை சூரியனை விட அதிக வெப்பம் கொண்டவை எனவும், வழக்கத்திற்கு மாறாக வலுவான காந்தப்புலங்களையும் காற்றையும் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
GMRT என்றழைக்கப்படும் மாபெரும் ரேடியோ தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் 8 அரிதான ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
GMRT-யை பரந்த அலைவரிசை மற்றும் அதிக உணர்திறனை கொண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் அதிக கண்டுபிடிப்புகள் நிகழ்வதாக புனே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்