படித்தால் மட்டும் போதுமா? ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar
bharathi theerthar

ஒரு சமயம் துர்வாச மஹரிஷியானவர் தாம் படித்த எண்ணற்ற சாஸ்திரப் புத்தகங்களைச் சுமந்து கொண்டு மஹாதேவரிடம் வந்தார்.

அப்பொழுது அங்கிருந்த இன்னொரு மஹான் அவரிடம், “உனக்கும் ஒரு கழுதைக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார்.

ஒரு கழுதைக்கு தான் சுமக்கும் பொருளைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆத்மதத்துவத்தை தெரிந்து கொள்வதற்காகத்தான் நாம் சாஸ்திரத்தையே படிக்கிறோம்.

சாஸ்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆத்மதத்துவத்தை மறந்துவிட்டால், அது கழுதையைப் போல் ஆகிவிடும். என்றார்

இந்த உதாரணங்களையெல்லாம் பார்க்கும் பொழுது, “நாம் சாஸ்திரங்களை வெறுமனே படித்து அவற்றில் புலமை அடைந்து விட்ட மாத்திரத்தில் நாம் செய்ய வேண்டியதைச் செய்தவர்களாகி விடுவோம் என்ற நினைப்பு தவறு” என்று தெரியும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.