ஏடிஎம் பின் நம்பர் மறந்தா இப்படி பண்ணுங்க!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
atm 1 1
atm 1 1

இன்றைய காலகட்டத்தில், ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி தான் பலரும் பணம் எடுக்கின்றனர். ஆனால் பல முறை அவர்கள் ஏடிஎம் பின்-ஐ மறந்து விடுகிறார்கள்.

இதனால் பலரும் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.. இன்று, மொபைலில் இருந்து ஏடிஎம் பின்-ஐ உருவாக்கக்கூடிய சில எளிய வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

நீங்கள் ஏடிஎம் பின்னை மறந்துவிட்டால், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் மூலம் புதிய ஏடிஎம் பின் பெறலாம். உதாரணமாக உங்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து முதலில் Pin என்று டைப் செய்து space விட்டு உங்கள் ஏடிஎம் அட்டை எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை பதிவிட்டு மறுபடியும் space விட்டு உங்க வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களையும் டைப் செய்து கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இதற்குப் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அருகிலுள்ள எந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்று உங்கள் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து OTP-ஐ உள்ளிடவும்.

இதற்குப் பிறகு உங்கள் புதிய ஏடிஎம் பின்னை உருவாக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் ஏடிஎம் பின் பெறும் வசதியை பெரும்பாலான வங்கிகள் வழங்கியுள்ளன. உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுமையான தகவல்களைப் பெறலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.