லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பீட்ரூட் பீஸ் பிரியாணி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Beetroot Piece Biryani - 2026

பீட்ரூட் பீஸ் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி-1 கப்
பீட்ரூட்-2
பச்சை பட்டாணி-கால் கப்,
வெங்காயம் -1
தக்காளி-1
இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலம் -தலா இரண்டு
சோம்பு-1டீஸ்பூன்
பிரியாணி இலை-1
பிரியாணி மசாலாத்தூள்-1டீஸ்பூன்
பச்சை மிளகாய்-1
புதினா-ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை-1 கைப்பிடி
கறிவேப்பிலை-1 கீற்று
மோர்-கால் கப்,
நெய்யில் வறுத்த முந்திரி-10
உப்பு-தேவைக்கு
எண்ணை-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
அரிசியை கழுவி 1 1/2 கப் நீரில் ஊறவைக்கவும்.
பீட்ரூட்டை துருவி கொள்ளவும்
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும்
குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு,சோம்பு
பிரியாணி இலையை போட்டு வதக்கவும்
வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கியதும் ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
தக்காளியை போட்டு வதக்கவும்
பச்சை பட்டாணியை போட்டு வதக்கவும்
பின் பீட்ரூட் துருவலை போட்டு வதக்கவும்
பின் புதினா,கொத்தமல்லி இலைகளை போட்டு வதக்கி,மசாலாப்பொடியையும் மோரும் சேர்த்து வதக்கவும்.
பின் அரிசி ஊறிய நீர் விட்டு கொதிக்கவிடவும்..
கொதிக்கும் நீரில் அரிசியை சேர்த்து குறைவான தீயில் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்
ரெடியான பிரியாணியில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்

காரத்திற்கேற்ப மிளகாயின் அளவை கூட்டி கொள்ளலாம்
விரும்பினால் மோருக்கு பதில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் அல்லது 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்…
குழந்தைகள் லஞ்ச்பாக்ஸ்க்கு ஏற்ற இந்த பிரியாணியை,பொரித்த அப்பளம் அல்லது வத்தல் வைத்து கொடுக்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.