மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஹெச்.ராஜா வேண்டுகோள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vajpayeeji - 2026

இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94வது பிறந்த தினம். இதை பாஜக.,வினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு வித்திட்டவர். கார்கில் வெற்றி நாயகன். அவரது பிறந்த தினத்தை நல்லாட்சி தினமாக கடை பிடித்து வருகிறது பாஜக. இன்றைய தினம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வோம் – என்று டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

வாஜ்பாய் மறைந்த பின்னர் கடைப்பிடிக்கப்படும் முதல் பிறந்த தின கொண்டாட்டம் என்பதால், அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர்!

நவ இந்தியாவின் நவீனத்துக்கு வித்திட்டவர் அடல்பிஹாரி வாஜ்பாய். தங்கநாற்கர சாலைத் திட்டம் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படவும், தரம் பெருகவும், வியாபாரம் செழிக்கவும் வகை செய்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.