December 6, 2025, 5:02 AM
24.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 107): ஏழு அம்ச ஆவணம்!

godse fb - 2025

காந்தி தன் உண்ணாவிரதத்தை கைவிட டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் உருவாக்கப்பட்ட ’ ஏழு அம்ச ‘ ஆவணத்தில் ,ஹிந்து மஹா சபாவை சேர்ந்தவர்கள் யாரும் கையெழுத்திடவில்லை என்றாலும், அந்த ஆவணம் காந்தியிடம் சேர்ப்பிக்கப்படும் போது அந்த அறையில்,ஹிந்து மஹா சபாவை சேர்ந்தவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.

இது போதும் குழப்பத்தை ஏற்படுத்தவென காங்கிரஸ் கட்சி அதை பயன்படுத்தி கொண்டது. ஹிந்து மஹா சபாவின் தீவிர உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் கொள்கைக்கு மாறாக,சில சம்பவங்கள் நடந்தது பற்றி ( காந்தியின் அறையில் தேவையற்று சில ஹிந்து மஹா சபா உறுப்பினர்கள் இருந்தது பற்றி ) கோபமடைந்தனர்.

அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் செயலாளர் அஸூதோஷ் லஹிரிக்கு போதும் போதுமென்றாகி விட்டது.

இதை குறிப்பிடுவதற்கு காரணம், ஹிந்து மஹா சபாவின் மொத்த சிந்தனையுமே காந்திக்கு எதிராக இருந்தது என்பதை ‘ காந்தி கொலை ’வழக்கின் போது காவல்துறை சந்தேகிக்க ஒரு காரணமாயிற்று.

உண்ணாவிரதத்தை கைவிட்ட பிறகு காந்தி செல்லும் இடமெல்லாம் ஹிந்துக்கள்,முஸ்லீம்கள்,சீக்கியர்கள் ஒன்றாக பழங்கள்,இனிப்புகள் ஆகியவை பரஸ்பரம் கொடுத்துக் கொள்ளும் காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.

காங்கிரஸ், தங்களை மக்கள் முன் முட்டாள்களாக காட்சியளிக்க வைத்து விட்டது எனும் கோபம் ஹிந்து மஹா சபாவினருக்கு இருந்தது.

இதற்கிடையே, தங்கள் தொண்டர்களை மீண்டும் போராட்டத்திற்கு ஹிந்து மற்றும் சீக்கிய தலைவர்கள் தூண்டி விடாமல் இருக்க, அனைத்து மத ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்தது.

ஹிந்து மஹா சபாவின் செயலாளர் லஹிரி ,ஒரு அறிக்கையை வெளியிடுவதை தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஹிந்து மஹா சபா எந்த உறுதிமொழியிலும் கையெழுத்திட வில்லை என்பதை மீண்டும் உறுதி செய்த லஹிரி, அந்த உறுதிமொழியை செயல்படுத்த தனது கட்சி ஒரு போதும் சம்மதிக்காது என்று கூறினார்.

‘காந்தியின் உண்ணாவிரதத்தின் காரணமாக ஹிந்துக்களின் நிலை, இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் பலவீனப்படுத்தப்பட்டு விட்டதாக அவர் தன் அறிக்கையில் குற்றஞ்சாட்டினார் ‘.

‘ஏழு அம்ச கொள்கையை ஒரு தற்கொலை கொள்கை என வருணித்த அவர் அதிலிருந்து ஹிந்து மஹா சபா முற்றிலும் விலகி நிற்பதாகக் கூறினார் ‘. இந்த அறிக்கையானது 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ந் தேதி வெளியிடப்பட்டது.

அதன் நகல்களை படித்த நாதுராமும், ஆப்தேயும் திருப்தி யடைந்தனர். தங்கள் கட்சி, கொள்கைகளை விட்டு கொடுக்காது, காந்தியின் உயிரைக் காக்க, ஹிந்துக்களின் நலன்களை ,தேசத்தின் நலன்களை புறக்கணிக்கும் காரியங்களில் ஈடுபடவில்லை என்று சந்தோஷமடைந்தனர்.

தாங்கள் நிறைவேற்ற எண்ணியிருந்த காரியத்திற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில்,ஹிந்து மஹா சபாவின் நிலைப்பாடு தெளிவானது அவர்களுக்கு உத்வேகம் அளித்தது.

அன்றைய மாலை பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தி அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்தது. காந்தியின் உண்ணாவிரதத்தின் கடைசி இரண்டு நாட்களில் ,கவலை அளித்த அவரது உடல்நிலை, தேறி வருவதாகவும், அடுத்த நாள் ( அதாவது ஜனவரி 20ந் தேதி ) அவர் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வெளியே வந்து கூட்டத்தினரிடையே சில வார்த்தைகள் பேசக்கூடும் என்றும் அந்த செய்தி தெரிவித்தது.

இப்போது ஒரு நடைமுறை பிரச்சனை ஒன்று தீர்ந்தது. அவர்கள் காந்தியை கொல்ல வந்திருந்தார்கள்.

அவர் படுக்கையிலிருக்கும் வரை,அறையை விட்டு வெளியே வராத வரையில் ,அவர்களது திட்டத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அவரைச் சுற்றி அவரது விச்வாசிகளும்,அவரை பார்க்க வருபவர்களும் இருந்துக் கொண்டே இருப்பார்கள்.

அவர் வெளியே வருவது நாதுராம்,ஆப்தே,மற்றும் அவரின் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது. ஏனென்றால் அவரை வெளியே வைத்துக் கொல்வது எளிது என்று அவர்கள் எண்ணினார்கள்.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories