2019 மக்களவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது.
உத்தரப் பிரதேச மாநிலம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உ.பி- 14, ராஜஸ்தான்-12, ம.பி மற்றும் மே.வங்கம்- தலா 7, பீகார்- 5, ஜார்கண்ட்- 4, ஜம்மு காஷ்மீர்- 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இன்றைய வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகள் ஆளும் பாஜக.,வுக்கு மிக முக்கியமான தொகுதிகளாகக் கருதப் படுகிறது. கடைசி மூன்று கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் தான் பாஜக.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அக்கட்சி உள்ளது.
7 மாநிலங்களில் 51 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில், 8.76 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 4.63 கோடி ஆண்களும் 4.13 கோடி பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் 2,214 அடங்குவர்.
மொத்தம் 96,088 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 674 பேர் இந்த 51 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இந்த 51 தொகுதிகளில், பாஜக.,வில் இருந்து 48 பேரும், காங்கிரஸில் இருந்து 46 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 33 பேரும் சிபிஎம் 11, எஸ்பி 9 சிவசேனா 5, சிபிஐ 3, சுயேச்சைகள் 511 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தல்ல் லகோவில் பாஜக., வேட்பாளர் ராஜ்நாத் சிங் தனது வாக்கைப் பதிவு செய்தார். வாக்குச்சாவடி எண் 333, ஸ்காலர்ஸ் ஹோம் பள்ளியில் தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.
Home Minister and Lucknow BJP Candidate Rajnath Singh casts his vote at polling booth 333 in Scholars’ Home School pic.twitter.com/BXSZTvFeGS
— ANI UP (@ANINewsUP) May 6, 2019




