
ரஷ்யாவில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 41 பயணிகள் உயிரிழந்தனர்.
மாஸ்கோவில் உள்ள 3 விமான நிலையங்களில் ஒன்று செரிமேடியேவோ விமான நிலையம். இங்கிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு ஏரோபிளோட் விமானம் ஒன்று புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிய வந்ததும் உடனடியாக விமானத்தை தரையிறக்கி நிறுத்த விமானி முயற்சி செய்தார். ஆனால் நிலைமை கைமீறிப் போயிருந்தது. அப்போது விமானம் முழுவதும் திடீரென தீப் பற்றி, தீ மளமளவெனப் பரவியது.
இந்த விமானத்தில் 73 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், 41 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.



