கேரள சட்டப்பேரவை வரலாற்றில் கருப்பு தினம்: உம்மன் சாண்டி

இந்தியா

கேரள சட்டப்பேரவை வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கேரள சட்டசபையில் நிதியமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டங்களை இன்று நடத்தின. இதனால் அடிதடி ரகளை ஏற்பட்டு, சபையே போர்க்களம் போல் காட்சியளித்தது. இத்தகைய ஒரு நிகழ்வு ஒரு கறை என்று கருத்து தெரிவித்துள்ள உம்மன் சாண்டி, கேரள சட்டசபை வரலாற்றில் இன்று கருப்பு தினம். சட்டசபைக்குள் எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் வேதனையை தருகிறது. சபையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் இவ்வாறு போராடுவது மன்னிக்க முடியாத குற்றம். போராட்டக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். kerala-assembly   [su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”7″ tax_term=”212″ tax_operator=”0″ order=”desc”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.