சென்னை: 20ந் தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்தும் போராட்டம்நடத்தப் படுமென -கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; கட்சிப் பேதமின்றி அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளைகளோ கேட்கவே வேண்டியதில்லை. எனவே, மத்திய அரசு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்தங்களை மக்களவையில் நிறைவேற்றிவிட்டு,மாநிலங்களவையிலும் நிறைவேற்றிட முயற்சிப்பதைக் கண்டித்தும்; அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமான அமைச்சர் மீதுகுற்ற நடவடிக்கைகள் எடுத்து, அவரை உடனடியாகக் கைது செய்வதோடு,வழக்கினை சி.பி.ஐ. மூலமாக விசாரிக்க ஒப்படைத்திட வேண்டு மென்பதை வலியுறுத்தியும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 20-3-2015அன்றுவெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், அனைத்து வருவாய்மாவட்டங்களிலும் ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்னால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
