பெங்களூரு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜர்

Published:

subraman_mwn பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று ஆஜரானார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று தனது எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று காலை 10:45க்கு பெங்களூரு நீதிமன்றத்துக்கு நேரில் வந்த சுப்ரமணிய சாமி, தனது வாதத்தை எழுத்து பூர்வமாக, 14 பக்கங்களில் தாக்கல் செய்தார். இதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சுப்ரமணிய சாமி தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்துக்கு இன்று மதியம் ஜெயலலிதா தரப்பு வழக்குரைனஞர்கள் பதில் அளிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படக்கூடும்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img