Banana flower rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வாழைப்பூ சாதம்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
Banana flower rice - 2026

வாழைப்பூ சாதம்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கப்
வெண்ணெய் / நல்லெண்ணை – 3 டீஸ்பூன்
வாழைப்பூ – 1 கப் நறுக்கியது
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
ப.மிளகாய் – 2 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புதினா இலை – சிறிதளவு
உப்பு – தேவையானளவு
அரைக்க
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5 பற்கள்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி இலை – சிறிதளவு
புதினா இலை – சிறிதளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு – சிறிதளவு

செய்முறை
அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் சிறிது வெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, வாழைப்பூ சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை சேர்க்கவும். தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு மற்றும் அரிசியைச் சேர்த்து கொத்தமல்லி, புதினா இலைகளைத் தூவி மூடி வைக்கவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும் . சுவையான வாழைப்பூ சாதம் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.