samai vetrikai rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெற்றிலை சாமை சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
samai vetrikai rice - 2026

வெற்றிலை சாமை சாதம்
தேவையானபொருட்கள்
1/2 கப் சாமை அரிசி
23 வெற்றிலை
1 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சீரகம்
4 பல் பூண்டு
3 ஸ்பூன் எலுமிச்சை சாறு
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
சிறிது கடுகு
சிறிது உளுந்து
1 வர மிளகாய்
தேவையான அளவு -உப்பு,
தேவையான அளவு நல்லெண்ணெய் .

செய்முறை

முதலில் சாமை அரிசியை இருபது நிமிடம் ஊறவைத்து பின் அதனை இரண்டு கப் தண்ணீரில் வேகவிட்டு வெந்ததும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை உரலில் வைத்து மைய இடித்துக்கொள்ளவும்.

பின் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து அதில் இடித்து வைத்திருக்கும் வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
பின் அதில் எலுமிச்சை சாறையும், சாமை சாதத்தையும் சேர்த்து கிளறவும்.
வெற்றிலை சாமை சாதம் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.