சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
helicopter

குமுளியில் சுற்றுலா ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. கேரள மாநிலம், குமுளி அருகே உள்ள பத்துமுறியில், சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை துவக்கப்பட்டுள்ளது.

குமுளியில் இருந்து அரை மணி நேரத்தில் மூணாறு சென்று, இயற்கை அழகை ரசித்து திரும்பி வருவதற்கு, ஒருவருக்கு, 11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கான வசதியும் உள்ளது. ஏற்கனவே குமுளியில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள ஒட்டகத்தலமேட்டில், கடந்த மார்ச், 13ல் மற்றொரு தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

கேரளாவில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது பயணியரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.