வீட்டினுள் துப்பாக்கியுடன் நுழைந்து பெண்ணை மிரட்டிய இளைஞர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
gun
gun

சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி பெண்ணை மிரட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை பெரம்பூர், பட்டேல் ரோடு பகுதியில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த வீட்டுக்குள் திடீரென நுழைந்தார். துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கு இருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து கூச்சலிட்டு உள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் செய்தனர். இதில் அந்த துப்பாக்கி ஆசாமி வியாசர்பாடி, சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பதும் இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது.

இவர் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குடிபோதையில் இருந்துள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் அசல் துப்பாக்கியா அல்லது போலி துப்பாக்கியா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் பொழுது இது சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் போல உள்ளது. அவரது நண்பர் சிவா என்பவர் அவருக்கு கொடுத்துள்ளதாக கூறுகிறார். அவரது துப்பாக்கி குறித்த உண்மைத் தன்மையை அறிய ஆயுத சோதனை நடத்த உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.